search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு"

    ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூரில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் “பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

    தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

    அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியதோடு, கார்த்திக் என்பவரை “என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற” என சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார். மேலும் கார்த்திக்கை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். “ஏன் அவரை அடிக்கிறீர்கள்” எனக் கேட்டவர்களை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

    பாலியல் தொல்லை

    இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும் அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார்.

    மிருகத்தனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    “இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம், பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது” என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதை அறியலாம்.

    கடந்த ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப்பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக்கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...பதான்கோட் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு

    அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார். அ.தி.மு.க. கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கின்றனர் என்றே தெரியவில்லை. ஒற்றுமையில்லாத கூட்டணி அ.தி.மு.க. கூட்டணிக்கு நீட் தேர்வு ரத்து, எட்டுவழி சாலை, மது ஒழிப்பு போன்ற பிரச்சினைகளில் ஒன்றுமையில்லை.

    ஆட்சி முடியும் போது ராமதாஸ் 10 கோரிக்கைகளை கொடுத்து என்ன பயன். வாக்குசாவடியை கைப்பற்றுவோம் என பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் வன்முறையை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு பேசுகிறார்.

    தேர்தல் ஆணையம் அன்புமணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நரேந்திர மோடி விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை. டெல்லியில் போராடிய விவசாயிகளை அழைத்து பேசவில்லை. மாறாக வசதி படைத்த தொழிலதிபர்களின் 36,200 கோடியை ரத்து செய்துள்ளார்.

    பிரதமர் விவசாய கடன்களை செய்து செய்வாரா. பா.ம.க. சாதியை சொல்லி மக்களை திரட்டுகிறது. சாதி பெயரால் ஒரு குடும்பமே வாழ்கிறது. சண்டைகளை உருவாக்குகிறது பா.ம.க. வன்னிய இளைஞர்களுக்கு ராமதாஸ் என்ன செய்தார். பி.ஜே.பி. மதக் கலவரங்களை உருவாக்குகிறது. மகாத்மாவை படுகொலை செய்த இயக்க ஆர்.எஸ்.எஸ்., அ.தி.மு.க. குழப்பத்திற்கான கூட்டணி. 18 தொகுதி இடைத்தேர்தல், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    ஜெயலலிதா கைரேகை பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். #Jayalalithaa #fingerprints
    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.

    ஏற்கனவே இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு தொடுத்திருந்தார். இவரது கோரிக்கையை ஏற்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.



    தீர்ப்பில், கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள கை ரேகையும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதோடு ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் எப்படி கைரேகை வைத்திருக்க முடியும். எனவே, கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸின் வெற்றியை ரத்து செய்துள்ளார்.

    ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக்கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.

    எனவே, தலைமை தேர்தல் ஆணையம் இத்தகைய தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Jayalalithaa #fingerprints
    கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது தமிழக அரசு அடக்குமுறையை கையாள்வதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருணாசை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே பழைய வழக்குகளை கிளறுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை என பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.

    நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா போலீசார் பாதுகாப்பில் சுற்றி வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது அரசு அடக்குமுறையை கையாள்கிறது. நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேலும் ஜாமீன் பெற முடியாமல் தவிக்கும் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். மணல் திருட்டு, அரசு அனுமதியுடன் தனியார் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

    ஆனால் காவல் துறையினர் நியாயமாக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது கூட அடக்குமுறையை கையாள்கின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றாக திரட்டி வலிமைமிக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் வாடகை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் மீது திணிக்கப்படும் இந்த வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபயணம் தொடங்கியது.

    திண்டுக்கல் மரியநாதபுரத்தில் தொடங்கிய இந்த நடை பயண பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக் குழு நிர்வாகி பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் ஆசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மரியநாதபுரத்தில் தொடங்கி குள்ளனம்பட்டி, ராஜலெட்சுமிநகர், நாகல்நகர் சந்தை, ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் சவேரியார்பாளையத்தில் இன்றைய பிரசாரம் நிறைவடைகிறது. நாளை திருமலைசாமிபுரத்தில் தொடங்கி ரவுண்டு ரோடு, அபிராமி நகர், கோபால்நகர், ஒய்.எம்.ஆர்.பட்டி பஸ்நிலையம், மணிக்கூண்டு, நந்தவனம் ரோடு, நாராயணபிள்ளை தோட்டம் வழியாக காமராஜர்புரத்தில் நிறைவடைகிறது.
    சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திட மார்க்சிஸ்டு கம்யூ. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர்நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு கூட்டம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி உள்ளிட்டு கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பாகூர் கொம்யூனில் குருவிநத்தம் பெரியார் நகர் மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தற்போது தென்பெண்ணையாற்றின் கரையோரம் அவ்வப்போது எழும் சர்ச்சைகளுக்கு இடையே சவ அடக்கம் செய்யப்படுகிறது. இவர்களுக்கு நிரந்தர சுடுகாடு இல்லை.

    குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை ஆகிய 2 கிராம பஞ்சாயத்தில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இப்பகுதி மக்கள் தென்பெண்ணையாற்றின் சிறுகரையில்தான் சவ அடக்கம் செய்கிறார்கள். ஆற்றைக் கடந்துதான் சவ அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளப் பெருக்கால் காணாமல் போய்விட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்ட பாலம் 2017 நவம்பரில் பெய்த கன மழையால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் சவ அடக்கம் செய்வதற்கு ஆற்றுக்குள் இறங்கி போக வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் சவ அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    ஆற்றின் குறுக்கே புதிய தரமான பாலம் கட்டித் தந்திட வேண்டும். சுடுகாட்டில் மின்விளக்கு, குடிநீர் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும் வலியுறுத்தி கிராமங்களில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசும், சம்மந்தப்பட்ட துறையும் தலையிடாத பட்சத்தில் சுடுகாடு வசதி கேட்டு மக்கள் பங்கேற்போடு போராட்டத்தை நடத்திடவும் முடிவெடுத்துள்ளது.

    நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 10 லட்சம் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 15 நாட்கள் மட்டும் வேலை கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைத்து வேலை நாட்களையும் குறைத்து வருகிறது.

    இதனால் கிராமப்புற வறுமை, ஒழிப்பு, பிழைப்புக்காக புலம் பெயருதலை தடுத்தல் ஆகிய நோக்கம் சிதைக்கபட்டு விடும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் அடிப்படையில் 65 லட்சம் மனித வேலை நாட்களை உருவாக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும் வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காங்கிரஸ் அரசு. மக்கள் நல திட்டங்களை வெட்டி சுருக்குவது, தனியார் மயத்தை ஊக்குவிப்பது, மின் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற சேவைக்கட்டணங்களை பெருமடங்கு உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவதுஎன்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் என்ற மத அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்கிவரும் அட்சய பாத்திரா அறக்கட்டளை என்ற தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முடிவை மேற்கொண்டுள்ளது.

    மதச்சார்ப்பற்ற அரசியல் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின் தற்கொலைக்கு ஒப்பான இத்தகைய செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள மதிய உணவுத்திட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?

    இந்த ஒப்பந்தம் குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைகுழு, ஆசிரியர்கள், பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள்,ஊட்டச்சத்து நிபுணர்கள், தற்போது இப்பணியை செய்துவரும் ஊழியர்களிடம்கருத்து எதையும் கேட்காமல், அடிப்படையான ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இது அப்பட்டமான நமது உணவு பாரம்பரியத்தின் மீதும், உணவுஉரிமை மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலாகும். உடனடியாக தனியாரிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மதிய உணவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ஆண்டிப்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கடமலைக்குண்டு பகுதி யில் ஒன்றிய செயலாளர் மணவாளன் தலைமையில் மறியல் செய்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைதானார்கள்.

    போடியில் தேவர் சிலை முன்பு துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    பழனி ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தமிழக முதல்வர் பதவி விலக கோரி கோ‌ஷமிட்டனர்.

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கன்னிவாடி பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ×